Thursday, January 7, 2010

பொங்கல் 2010







பொங்கல் திருநாள்
பொங்கல், இது நகரத்தை விட கிராமங்கள்ல ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க. பொங்கல் வர ஒரு வாரம் முன்னாடியே கிராமத்து அம்மக்களுக்கு நிறையவே வேலை வந்திடும். வீடு சுத்தம் பன்றதில ஆரம்பிச்சு, புதுசா அறுவடை பண்ண நெல்லை வெயில்ல காய வெச்சு அத அரைச்சு சுத்தம் பண்ணி பச்சரசியாக்கி, அப்புறம் புது மண் பானை வாங்கி இப்டி பொங்கல் முடியற வர அவங்க ஒரே பிஸியா இருப்பாங்க...எங்க ஊர்ல எப்பவும் சாயந்திரமா பொங்கல் வெப்பாங்க...பொங்கல் அன்னைக்கு வாசல்ல முதல்ல அடுப்பு வெட்டுவாங்க, அப்புறம் வாசலுக்கு நடுவுல கலர் கோலம் போட்டு அதுக்கு நடுவுல சாணத்துல பிள்ளையார் செஞ்சு அதில ஒரு பரங்கி பூவ நட்டு அப்புறம் அதுக்கு பக்கத்தில கரும்ப செங்குத்தா வெச்சிருவாங்க...ஒவ்வொரு வீட்லயும் இத பாக்கும்போது செமையா இருக்கும்...அப்றமா பொங்கல் ரெடியான பிறகு அதை அந்த வாசல் பிள்ளையாருக்கு முன்னாடி வெச்சு படைச்சு எல்லாரும் சாமி கும்பிட்டுட்டு சாப்டுவோம் இதெல்லாம் எவ்ளோ அற்புதமான தருணங்கள்.....இந்த நகரத்தில சும்மா ஒரு உப்பு சப்பு இல்லாத ஒரு பொங்கல செஞ்சு சாப்டுட்டு அப்புறம் சினிமா, பீச்னு எங்காச்சும் போய்ட்டு வர்ரதுல பொங்கல் முடிஞ்சுடுது ....என்ன இருந்தாலும் நம்ம ஊரையும், அங்க கொண்டாடுற விழாக்களையும் அடுச்சுக்க முடியாது.....

மாட்டுப்பொங்கல்
இந்த நாள்ல அப்பாக்களுக்கு வேலை இருக்கும் எப்டின்னா மாடுகள ஆறு இல்லனா ஏரிகளுக்கு எடுத்துட்டு போய் குளிப்பாட்டி அதன் கொம்புகள சரி பண்ணி நல்ல பெயிண்ட் அடிச்சு அழகு படுத்தி வீட்ல ஓய்வு எடுக்க விட்ருவாங்க...இந்த நாள்தான் அந்த ஜீவராசிகள் ஓயவேடுக்கற நாள்.....இந்த நாள்ல இளைஞர்கள் சேர்ந்து விளையாட்டுபோட்டி நடத்துவாங்க....அன்னைக்கு சாயந்திரம் கோவில் திடல்ல பெரிய நீளமான அடுப்பு வெட்டி அதில ஊர் மக்கள் எல்லாரும் பொங்கல் வெப்பாங்க .....பொங்கல் ரெடியான பிறகு எல்லாரோட பொங்கல்ல இருந்து கொஞ்ச அளவு எடுத்து சாமிக்கு படைக்கிற பெரிய இலையில போட்டு அதோட தேங்காய் பழம் போட்டு சாமிக்கு படைப்பாங்க. அப்பரம் அத பிரசாதமா எல்லார்க்கும் தருவாங்க. சாமிக்கு படைக்கும் போது எல்லாரும் சேர்ந்து ' ஆடு மாடு புள்ளக்குட்டி நல்லாருக்க பொங்கலோ பொங்கல்னு கத்துவாங்க இத கேக்க ரொம்ப காமெடியா இருக்கும். அப்பறம் வீடுகள்ல இருக்கற மாடுகளுக்கு அந்த பிரசாதத்த தருவோம்....

காணும் பொங்கல்
இன்னக்கு மாடுகள குளிப்பாட்டி அது கழுத்துல தேங்காய் கரும்ப கட்டி முதல் நாள் பொங்கல் வெச்ச அடுப்ப தாண்டி மாடுகள குட்டிட்டு வரணும் அப்படி தாண்டின உடனே மாடுகளுக்கு கட்டிருக்கிற தேங்காய் கரும்ப அருக்கனும் அதுதான் விளையாட்டு....அது ஒரு வீர விளையாட்டுன்னு வெச்சுக்கலாம்....இதில பெரிய காமெடி என்னன்னா ...மாடு அடுப்ப தாண்டும் போது பசங்க பட்டாசு கொளுத்தி போட்ருவாங்க அந்த சத்தத்த கேட்டு பல மாடு ஓட்டிட்டு வந்தவங்கள இழுத்து தள்ளிட்டு வெறிச்சு ஓடிடும்.......

3 comments:

  1. http://machaanblog.blogspot.com/2010/01/blog-post_18.html

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். நம்ம ஊர் கலாச்சாரம் பற்றி விரிவாக எழுதி இருக்கின்றீர்கள்.

    ReplyDelete